அப்பா என்றால் முருகப்பா
அப்பா என்றால் முருகப்பா அய்யா என்றால் வேலய்யா
அம்மா என்றால் சண்முகம் அத்தனையும் உன்முகம்
என்னபேரு சொல்லி உன்னைக் கூப்பிட்ட போதும்
என்மனமும் இனிப்பதென்ன நினைத்திட்ட நேரம்
செந்தமிழும் போதுமா
தேன் தினைமா வேணுமா
கண்ணாலுன்னைக் காண்பதிலே பேரானந்தமே
கால்அழகு ஒன்றுமட்டும் கருத்தில் மேவுமே
கன்னித் தமிழ் போதுமா
காவடியும் வேணுமா
வேல்அழகைப் பார்ப்பவர்கள் வேதனைமாறும்
விழிஅழகு வினையறுத்து, சாதனைகூறும்
பாட்டு மட்டும் போதுமா
பால்பழமும் வேணுமா
மயிலாட்டம் மக்களுக்கு ஒரே கொண்டாட்டம்
மகுடமணி ஒளியழகோ என்றும் கொண்டாட்டம்
பாட்டு மட்டும் போதுமா
பஞ்சாமிர்தம் வேணுமா
சேவல்கொடி அசைவதிலோர் சிங்காரச் சிறப்பு_அது
ஜெகத்தினையே எழுப்பிவிடும் சேதியின் பிறப்பு
பாட்டு மட்டும் போதுமா
பன்னீருனக்கு வேணுமா
வலதுபுறம் வள்ளியம்மை சூரியனாமே
இடதுபுறம் தேவயானை சந்திரனாமே
ஒளியழகே வேலய்யா
ஓடிவாராய் முருகய்யா
அப்பா என்றால் முருகப்பா அய்யா என்றால் வேலய்யா
அம்மா என்றால் சண்முகம் அத்தனையும் உன்முகம்
என்னபேரு சொல்லி உன்னைக் கூப்பிட்ட போதும்
என்மனமும் இனிப்பதென்ன நினைத்திட்ட நேரம்
செந்தமிழும் போதுமா
தேன் தினைமா வேணுமா
கண்ணாலுன்னைக் காண்பதிலே பேரானந்தமே
கால்அழகு ஒன்றுமட்டும் கருத்தில் மேவுமே
கன்னித் தமிழ் போதுமா
காவடியும் வேணுமா
வேல்அழகைப் பார்ப்பவர்கள் வேதனைமாறும்
விழிஅழகு வினையறுத்து, சாதனைகூறும்
பாட்டு மட்டும் போதுமா
பால்பழமும் வேணுமா
மயிலாட்டம் மக்களுக்கு ஒரே கொண்டாட்டம்
மகுடமணி ஒளியழகோ என்றும் கொண்டாட்டம்
பாட்டு மட்டும் போதுமா
பஞ்சாமிர்தம் வேணுமா
சேவல்கொடி அசைவதிலோர் சிங்காரச் சிறப்பு_அது
ஜெகத்தினையே எழுப்பிவிடும் சேதியின் பிறப்பு
பாட்டு மட்டும் போதுமா
பன்னீருனக்கு வேணுமா
வலதுபுறம் வள்ளியம்மை சூரியனாமே
இடதுபுறம் தேவயானை சந்திரனாமே
ஒளியழகே வேலய்யா
ஓடிவாராய் முருகய்யா