ஆதிமூல முருகா

ஆதிமூல முருகா, முருகா
ஆண்டியான முருகா
உன் துதிகள் பாடி வந்தேன்
எந்தன் குறைகள் தீர்க்க வருவாய்


உன் வேலும் ஆட வேண்டும், முருகா
மயிலும் ஆட வேண்டும்
நீயும் ஆட வேண்டும், முருகா
நானும் ஆட வேண்டும்.

என் தந்தை ஆக வேண்டும். நீயே
தாயும் ஆக வேண்டும்
உன் பிள்ளையாக வேண்டும், முருகா
உலகம் வாழ வேண்டும்.