சின்னச் சின்ன காவடி

சின்னச் சின்னக் காவடி செந்தில் நாதன் காவடி
வண்ண வண்ணக் காவடி வள்ளிநாதன் காவடி


அங்கும் இங்கும் காவடி அழகு வேலன் காவடி
இங்கும் அங்கும் காவடி ஏர கத்தான் காவடி

ஆட்டம் ஆடும் காவடி ஆண்டியப்பன் காவடி
பாட்டுப் பாடும் காவடி பழநி யப்பன் காவடி

முன்னும் பின்னும் காவடி முருக வேலன் காவடி
கண்ணும் மனமும் காவடி கந்த வேலன் காவடி

இரத்தினவேல் காவடி இன்ப மூட்டும் காவடி
பழநி மலைக் காவடி பஞ்சந் தீர்க்கும் காவடி

சென்னி மலைக் காவடி சேவற் கொடியோன் காவடி
தண்ணீர் மலைக் காவடி தாகம் தீர்க்கும் காவடி

பாலும் பழமும் காவடி பஞ்சாமிர்தக் காவடி
வேலும் மயிலும் காவடி வினைகள் தீர்க்கும் காவடி