பத்துமலையான்

பத்துமலையிலே-முருகன்
பவனி வருகிறான்
காண வாருங்கள்-கந்தன்
காட்சி தருகிறான்


கொட்டு மேளமும்-அதிர்
வேட்டு சத்தமும் சீனர்
கத்தும் கோஷமும்-நம்ம
காதில் விழுகுதே

பாடல் ஆயிரம்
பாடும் பக்தர் ஆயிரம்
கூடும் கூட்டமே
போடும் கோஷம் கேட்குதே

கோலாலம்பூரில்-பக்தர்
கூட்டம் சேருதே-தை
பூச நாளிலே-அவன்
தரிசனம் காண்போம்

வேல் குத்தியே
பால் குடம் தாங்கியே
சீனர் வருகிறார்-நாம்
சேர்ந்து செல்வோம்

தங்கத் தேரிலே-முருகன்
பவனி வருகிறான்
தணிகை மலையிலே-அவன்
தரிசனம் காண்போம்

தண்ணிமலை யானை
பினாங்கு நகரிலே
நம்பி வாழ்கிறார்-அங்கே
நாடு செழிக்குதே

செட்டி முருகனை-நாம்
சிங்கப்பூரிலே
கண்டு மகிழ்வோம்-நம்ம
கவலை மறப்போம்

பழனி மலையிலே-அவன்
பண்டாரமானான்
பாத யாத்திரை-வரும்
பக்தரைக் காப்பான்

கருணாலயம் பழ. இராமநாதன்