பழனிமலை காவடி

வேல் முருகா வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா வேல் முருகா வேல் வேல்


குன்றக்குடியினிலே காவடி அரோகரா அந்தக்
கூர்வேலான் குமரனுக்குக் காவடி அரோகரா
கோடிக்கரை காவடி கூர்வேலான் காவடி
குன்றிலாடும் குமரனுக்கு குறைவில்லாத காவடி

ஆடிக்கிருத்திகையில் காவடி எங்கள்
அய்யனுக்கு தைப்பூசக் காவடி
ஆடிவரும் காவடி அழகு மயில் காவடி
அரோகரா பாட்டுக்கென்றும் ஆடிவரும் காவடி

பழனிமலை மேலே காவடி அந்த
பஞ்சாமிர்தப் பிரியனுக்கு காவடி
பாட்டுக்கு ஆடிவரும் காவடி பன்னீரில் குளித்துவரும் காவடி
பஞ்சத்தை தீர்க்குமிந்த சண்முகனின் காவடி

நீண்ட மலையோரம் காவடி அந்த
நீலமயில் சாமிக்கு காவடி
சந்தனத்தில் காவடி சர்க்கரையில் காவடி
சங்கடங்கள் தீர்க்குமிந்த சண்முகனின் காவடி

எட்டுக்குடி முருகனுக்கு காவடி தினம்
எங்கும் நிறை அழகனுக்கு காவடி
ஏறிவரும் காவடி ஏற்றம் தரும் காவடி
எங்கள் குல முருகனுக்கு என்றென்றும் காவடி

ஓங்கார ரூபனுக்கு காவடி அந்த
முரைத்த அய்யனுக்கு காவடி
ஒய்யாரக் காவடி ஒயிலான காவடி
அண்டிவந்த அனைவரையும் ஆளவைக்கும் காவடி

-சித. சம்பந்தம்