ரோஜாப்பூ மணக்குதென்று

ரோஜாப்பூ மணக்குதென்று ராஜாவுக்கு வாங்கிவந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

மல்லிகைப்பூ மணக்குதென்று மன்னனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

சம்பங்கிப்பூ மணக்குதென்று ஷண்முகனுக்கு வாங்கிவந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

பிச்சிப்பூ மணக்குதென்று பிள்ளைக்கு நான் வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

முல்லைப்பூ மணக்குதென்று முருகனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

தாமரைப்பூ மணக்குதென்று தங்கத்துக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

குறிஞ்சிப்பூ மணக்குதென்று குமரனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

விபூதி மணக்குதென்று வேலனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

சந்தனம் மணக்குதென்று ஷண்முகனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

குங்குமம் மணக்குதென்று குமரனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

பன்னீரும் சவ்வாதும் பாலனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

சிங்கார சட்டை ஒன்று சீமானுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் இருக்கும் அழகினைத்தான் என்ன சொல்வேன்

வைரக்கிரீடம் ஒன்று வள்ளலுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் ஜொலிக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

மணக்கும் மலர்களெல்லாம் மன்னனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் மணக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

இனிக்கும் பழங்களெல்லாம் இறைவனுக்கு வாங்கி வந்தேன்
அதைவிட அவன் இனிக்கும் அதிசயத்தை என்ன சொல்வேன்

இசைத்தொண்டர் சுப.சுப.நாராயணன்