லண்டன் வடிவேலன்
சரணம் சரணம் முருகையா - சாமி
சரணம் சரணம் முருகையா
சரணம் சரணம் முருகையா - சாமி
சரணம் சரணம் முருகையா
மலைக்குடி வேலன் இன்று கடல்தாண்டினான்-லண்டன்
மாநகரில் வந்து குடியேறினான்
சிலைவடிவாக வந்து வரம் நல்கினான்-தமிழர்
திருவருள் கொள்வதற்குத் துணையாகினான்
எங்கிருந்தும் அவனை மறப்பதில்லை-தமிழர்
ஏற்றும் திருவிளக்கு அணைவதில்லை-பொங்கும்
தரும வெள்ளம் குறைவதில்லை-தமிழர்
புகழும் பொருளும் என்றும் அழிவதில்லை
நாகரிகம் வளர்ந்த மேற்கினிலே-குமர
நாயகன் கோவில் கண்டார் ஆசையிலே
தேக உழைப்பை சிலர் உவந்து தந்தார்-சிலர்
திரவியம் தந்ததுடன் தமையும் தந்தார்
ஆறுபடை வீடு என்று அழைத்து வந்தோம்-ஒரு
அற்புத வீட்டை இங்கே படைத்துவிட்டோம்
ஏழுபடை வீடு என்று தொடர்ந்து செல்வோம்-லண்டன்
எழும்பிய கோவிலையும் சேர்த்துக்கொள்வோம்
இலங்கை முருகனுக்கோர் கதிர்காமம்-பொருள்
இலங்கும் மலேசியாவில் பலகிராமம்
துலங்கிடும் லண்டனுக்கு தொடர்ந்து வந்தான்-எங்கள்
சுவாமிநாதன் அருளைச் சுரக்க வந்தான்
அருணகிரி ஒருநாள் வரைந்து வைத்தார்-அவர்
அடிச்சுவட்டில் பலபேர் எழுதிவைத்தார்-கருணை
முருகன் தன்னை ஏற்றி வைத்தார்-கவிஞர்
கண்ணதாசன் இதனைப் பாடி வைத்தார்
-கவிஞர் கண்ணதாசன்
சரணம் சரணம் முருகையா - சாமி
சரணம் சரணம் முருகையா
சரணம் சரணம் முருகையா - சாமி
சரணம் சரணம் முருகையா
மலைக்குடி வேலன் இன்று கடல்தாண்டினான்-லண்டன்
மாநகரில் வந்து குடியேறினான்
சிலைவடிவாக வந்து வரம் நல்கினான்-தமிழர்
திருவருள் கொள்வதற்குத் துணையாகினான்
எங்கிருந்தும் அவனை மறப்பதில்லை-தமிழர்
ஏற்றும் திருவிளக்கு அணைவதில்லை-பொங்கும்
தரும வெள்ளம் குறைவதில்லை-தமிழர்
புகழும் பொருளும் என்றும் அழிவதில்லை
நாகரிகம் வளர்ந்த மேற்கினிலே-குமர
நாயகன் கோவில் கண்டார் ஆசையிலே
தேக உழைப்பை சிலர் உவந்து தந்தார்-சிலர்
திரவியம் தந்ததுடன் தமையும் தந்தார்
ஆறுபடை வீடு என்று அழைத்து வந்தோம்-ஒரு
அற்புத வீட்டை இங்கே படைத்துவிட்டோம்
ஏழுபடை வீடு என்று தொடர்ந்து செல்வோம்-லண்டன்
எழும்பிய கோவிலையும் சேர்த்துக்கொள்வோம்
இலங்கை முருகனுக்கோர் கதிர்காமம்-பொருள்
இலங்கும் மலேசியாவில் பலகிராமம்
துலங்கிடும் லண்டனுக்கு தொடர்ந்து வந்தான்-எங்கள்
சுவாமிநாதன் அருளைச் சுரக்க வந்தான்
அருணகிரி ஒருநாள் வரைந்து வைத்தார்-அவர்
அடிச்சுவட்டில் பலபேர் எழுதிவைத்தார்-கருணை
முருகன் தன்னை ஏற்றி வைத்தார்-கவிஞர்
கண்ணதாசன் இதனைப் பாடி வைத்தார்
-கவிஞர் கண்ணதாசன்